பொள்ளாச்சி அருகே தொடர் கனமழை காரணமாக - தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியது!

தொடர் மழை காரணமாக தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்துத் தர பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை வைக்கின்றனர்.


பொள்ளாச்சி: தொடர் மழை காரணமாக தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்துத் தர பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை வைக்கின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெத்தநாயக்கனூர் ஊராட்சி கெங்கம் பாளையத்தில் கடந்த 10-ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து ரூபாய் மூன்று லட்சம் செலவில் தரைமட்ட பாலம் அமைத்தனர்.

தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்துத் தர பலமுறை துறை சார்ந்த அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர். இப்பகுதியில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர்.

கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு செல்ல இப்பாலம் பொது மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் பயன்பாட்டிலிருந்து வருகிறது.

ஆழியாறு அணை, திருமூர்த்தி மலை அணையில் இருந்து திறந்து விடப்படும் உப நீர் வருவதால் பாலத்திற்கு மேல் வெள்ளம் செல்கிறது. இதனால் அப்பகுதியில் முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர்.



கடந்த 2-வருடங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கடந்த ஆட்சியில் இழப்பீடு தர வில்லை என்பதைக் குறிப்பிடத்தக்கது.

மேலும், பகுதிக்கு வரும் அரசு பேருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே வருவதால் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.



தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலம் அமைத்துத் தர பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை வைக்கின்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...