வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் 3 மாணவிகள் வெற்றி பெற்று சாதனை..!

வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளான தர்ஷினி, மகாலட்சுமி, மிதுனா ஆகிய மூவரும் இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.


கோவை: வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் 3 மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளான தர்ஷினி, மகாலட்சுமி, மிதுனா இவர்கள் மூவரும் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் ஆவர்.

மிதுனா (உருளிக்கல்), மகாலட்சுமி (பச்சமலை), தர்ஷினி (ஈட்டியார்) இவர்களின் தாய், தந்தை தனியார் தேயிலை எஸ்டேட்டில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றதால் வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இதில் மிதுனா சூர்யாவின் அகரம் பவுண்டேசன் சார்பாக BE Aeronautical அதாவது வான்வெளி பொறியியல் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராபின்சன் மற்றும் ஆசிரியைகள் சுமதி கொடுத்த சிறப்புப் பயிற்சி மூலமாக இவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...