கோவையில் உரிமம் புதுப்பிக்காத 58-மதுபான பார்கள் மூடல்.!

கோவை மாவட்டத்தில் உரிமம் நீட்டிப்பு பெறாமல் செயல்பட்ட, 58-மதுபான பார்கள் மூடப்பட்டன. உரிமம் பெற்ற பின் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் உரிமம் நீட்டிப்பு பெறாமல் செயல்பட்ட, 58 'டாஸ்மாக்' மதுக்கடை பார்கள் மூடப்பட்டன.

கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர பகுதியில், 41- டாஸ்மாக் கடைகளும், புறநகர் பகுதியில், 74-கடைகளும் என, மொத்தம், 115- கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கடைகளின் அருகே தனியார் மூலம் பார்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பல மாதங்களாக மூடிக்கிடந்த டாஸ்மாக் பார்கள் கடந்த, 1ம் தேதி முதல் மீண்டும் செயல்படத் துவங்கின.

இந்நிலையில், பெரும்பாலான பார்கள் உரிமம் இல்லாமல் செயல்படுவதாக அதிகாரிகளுக்குப் புகார்கள் வந்தன. டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

இதில் உரிமம் இல்லாத பார்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, உடனே உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்தினர். ஆனால், அதிகாரிகள் அளித்த காலக்கெடுவுக்குள், 58 டாஸ்மாக் பார்களின் உரிமம் நீட்டிக்கப்படவில்லை.

இதையடுத்து மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், உரிமம் இல்லாமல் செயல்பட்ட, 58 பார்களை அதிகாரிகள் மூடினர். உரிமம் பெற்ற பின் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்படும் என, டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...