கோவையில் நாளை ஆன்லைன் மூலம் ஓய்வு ஊதியர்கள் பி.எப். சந்தாதாரர்கள் கூட்டம்..!

கோவையில் நாளை ஆன்லைன் மூலம் ஓய்வு ஊதியர்கள் பி.எப். சந்தாதாரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.


கோவை: கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள பி.எப்., மண்டல அலுவலகத்தில் 'நிதி ஆப்பே நிகட்' என்ற பெயரில் ஓய்வூதியர் குறை தீர்ப்பு கூட்டம், மண்டல பி.எப்., கமிஷனர் தலைமையில் நாளை ஆன்லைன் வாயிலாக நடத்தப்படுகிறது.

காலை, 11 முதல் 12 மணி வரையும், தொழிலதிபர்கள் (விலக்கு அளிக்கப்படாத மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள்) பகல் 12 முதல் 1 மணி வரையும், ஓய்வூதியர்களுக்கு, 2:30 முதல் 3:30 மணி வரையும் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஓய்வூதியர்கள், தங்களின் குறைகள் மற்றும் அது குறித்த விபரங்களுடன் பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வைப்பு நிதி யுஏஎன் எண், தொலைபேசி எண் மற்றும் மொபைல் எண்கள், இ--மெயில் (கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்) ஆகிய விபரங்களுடன், பி.எப்., அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரிக்கு [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மேலும், தரப்பட்டுள்ள இ-மெயிலுக்கு, அன்றைய தினம், ஆன்லைன் இணைப்பு வழங்கப்படும். இந்த தகவலை, பி.எப்., உதவி கமிஷனர் சுரேஷ் தெரிவித்தார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...