சிறுவாணி அணையின் நீர்மட்டம் 45-அடியாக உயர்ந்தது!

கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய சிறுவாணி அணையின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்ததால் 30 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


கோவை: கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய சிறுவாணி அணையின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்ததால் நீர் வெளியேற்றப்படுகிறது.

சிறுவாணி அணையின் நீர் மட்டம், 45 அடியாக உயர்ந்ததால், 30 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள வனப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுவாணி அணையின் மொத்த உயரம் - 50 அடி. பாதுகாப்பு காரணங்களைக் கூறி, 45 அடிக்கே தண்ணீர் தேக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையால், அணைக்கு நீர் வரத்து காணப்படுகிறது. நேற்றைய தினம், நீர் மட்டம், 45 அடியாக உயர்ந்தது. வரும் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக, சிறுவாணியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழைப் பதிவாகவில்லை. மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 30 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...