கோவையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய காலிங்கராயன் குளம் - பொதுமக்கள் மகிழ்ச்சி..!

இந்த குளத்தால் சுமார் 200 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு காலிங்கராயன் குளம் நிரம்பியுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டையம்பாளையம் ஊராட்சியில் காலிங்கராயன் குளம் உள்ளது. இந்த குளம் 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்குளம் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த குளத்தை இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து கடந்த 2019ம் ஆண்டு முதல் தூர்வாருதல், நீர்வழித்தடத்தை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாநகரில் உள்ள பெரும்பாலான குளங்களங்கள் நிறைந்துள்ளன.



இந்த நிலையில், துடியலூர், கீரணத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் காலிங்கராயன் குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குளம் நிரம்பி தண்ணீர் வழிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு நிறைந்துள்ள இக்குளத்தால் சுமார் 200 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...