கோவையில் மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் கணவன், மனைவி கைது...!

பொள்ளாச்சியில் மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் சஞ்சய் மற்றும் அவரது மனைவி சுருதி கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவையில் மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி நாச்சிகவுண்டர் வீதியை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி ஜெயலட்சுமி (76). கடந்த 2ம் தேதி மாலையில் வீட்டில் தனியாக இருந்த அவர் துணிகாயப் போட்டுக் கொண்டு இருந்தார்.

இதனையடுத்து, ஒரு ஆணும், பெண்ணும் திடீரென்று வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களிடம் ஜெயலட்சுமி யார் என்று கேட்பதற்குள், 2 பேரும் அந்த மூதாட்டியை கீழே தள்ளினர்.

மேலும், அவர் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்ததாக தெரிகிறது. இதையடுத்து, ஜெயலட்சுமியின் கழுத்தில் கிடந்த நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

பின்னர், இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு தமிழ்மணி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராம்தாஸ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சம்பவம் நடந்த நேரத்தில் 2 பேர் மட்டும் நடந்து செல்வது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் சஞ்சய் (21), அவரது மனைவி சுருதி (20) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது திருடியதை ஒப்புக் கொண்டனர்.

மேலும், கடன் தொல்லை மற்றும் தீபாவளி செலவிற்கு பணம் இல்லாததால், மூதாட்டி ஜெயலட்சுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...