சிறு-குறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர் கடுமையாகப் பாதிக்கப்படும் வகையில் மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகிறது. இதனை கட்டுப்படுத்த பிரதமருக்கு கொடிசியா கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை: சிறு-குறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர் கடுமையாகப் பாதிக்கப்படும் வகையில் மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகிறது. இதனை கட்டுப்படுத்த பிரதமருக்கு கொடிசியா கோரிக்கை விடுத்துள்ளது.
சிறு-குறு மற்றும் நடுத்தர தொழிற் துறையினர் கடுமையாகப் பாதிக்கப்படும் வகையில் மூலப்பொருட்களின் விலை குறிப்பாக ஸ்டீல் மற்றும் தொழிற்சாலைகள் சார்ந்த மூலப்பொருட்களான கோக், பிக்அயர்ன், ஸ்கிராப், எச்ஆர் சீட், சிஆர் சீட், காப்பர், அலுமினியம், கிராப்ட் பேப்பர், பிளாஸ்டிக் ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகிறது. இந்த சூழ்நிலை தொடருமானால் லட்ச கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும்.
தற்போது மூலப்பொருட்களின் விலை குறித்து எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை என்பதோடு அவற்றின் விலை உயர்வு ஒன்றே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள், அரசு துறைகள் ஆகியவற்றில் டெண்டர் எடுத்துப் பணி ஆணை பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் இந்த விலை உயர்வால் பெருமளவு நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மூலப்பொருட்கள் விலை உயர்வால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களின் உற்பத்தி செலவும் உயர்கிறது. ஆனால் சந்தையில் அதற்கான விலை கிடைக்காததால் அவற்றின் உற்பத்தி வேகம் தடைபடூகிறது. இதிலிருந்து மீண்டு வரும் வகையில் நடப்பு மூலதன வரையறையை மொத்த டர்ன் ஓவரில் 40% உயர்த்தி, கூடுதல் கடன் உதவி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எனவே கீழ்கண்டவற்றை மத்திய அரசாங்கம் பரிசீலித்துச் செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்:-
ஸ்டீலுக்கான இறக்குமதி வரியை நீக்குதல் மற்றும் தேவைக்கு ஏற்றபடி மூலப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தல்.
மூலப்பொருட்களின் உயர்ந்த பட்ச விலையை நிர்ணயிப்பதன் மூலம் தொழிற்சாலைகளுக்குக் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்காவது அதே விலையில் மூலப்பொருட்கள் கிடைக்குமாறு வழிவகை செய்தல்.
இரும்பு தாது மற்றும் ஸ்டீல் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தாராள உள்நாட்டு விநியோகம் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் வழங்குவதில் முன்னுரிமை அளித்தல்.
தேசிய சிறுதொழில் கழகத்தின் மூலம் உற்பத்திக்கான மூலப்பொருட்களை மொத்த கொள்முதல் செய்து 12 மாதங்களுக்கு ஒரே விலையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்தல்.
மூலப்பொருட்களின் விலை உயர்வு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வரையறைக்கு அப்பாற்பட்டதால் அவர்களின் ஆர்டர்களை ரத்து செய்வதற்கு பொதுத் துறை நிறுவனங்கள் எந்தவித அபராத தொகையும் இன்றி பொதுத் துறை நிறுவனங்கள் அனுமதி அளிக்கவேண்டும்.
பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பங்கு வர்த்தக நிறுவனத்தில் பதிவு செய்துள்ள நிறுவனங்களைச் சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளின் புதிய ஆர்டர்களை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் அனுமதிக்க வேண்டுகிறோம்.
செயில், விசாக் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற் நிறுவனங்களுக்கு மூலப்பொருட்களை விநியோகிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மற்றும் அனைத்து ஸ்டீல் தொழிற்சாலைகளும் தங்கள் மொத்த உற்பத்தியில் 50 சதவிகிதத்தை இந்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மானிய விலையில் அளிக்குமாறு கொடிசியா கேட்டுக்கொள்கிறது.
மேலும் முன் இருந்ததுபோல கோயம்புத்தூரில் செயில் நிறுவனத்தின் மூலப்பொருட்களின் கிடங்கை மீண்டும் திறக்குமாறும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை மானிய விலையில் அளிக்குமாறும் கொடிசியா கேட்டுக்கொள்கிறது. மேலும் அந்த மூலப்பொருட்களை மத்திய மாநில முகமைகள் மூலமாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
மிகக் குறைந்த விகிதத்தில் ஜிஎஸ்டி அடிப்படையிலான நிதி உதவி சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்குக் கிடைப்பதன் மூலம் மூலப்பொருட்கள் அதிக அளவில் கொள்முதல் செய்ய முடியும்.
மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான ஒரு கொள்கை முடிவைப் போர்க்கால அடிப்படையில் எடுக்குமாறு மாண்புமிகு பிரதமர் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கு வேண்டுகோள் வித்துள்ளோம்.
எனவே பிரதமர் தலையிட்டு இந்த மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இதற்கு நல்ல தீர்வு காணுமாறு கொடிசியா சார்பில் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு பிரதமருக்கு கொடிசியா கோரிக்கை விடுத்துள்ளது.