கந்த சஷ்டி கவச விழாவிற்கு கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை..!

பண்டிகை காலங்களில் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கிட வேண்டுமென்று பக்தர்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.


திருப்பூர்: கந்த சஷ்டி கவச விழாவிற்கு கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் முருகப் பெருமானை வணங்கி கொண்டாடப்படுவது சூரசம்ஹாரம் என்று அழைக்கப்படும் கந்தசஷ்டி ஆகும். பலர் சஷ்டி விரதம் மேற்கொண்டு கந்தசஷ்டி நாள் அன்று முருகனை தரிசித்து தங்களது விரதத்தை முடிப்பது பாரம்பரிய ஐதீகம் ஆகும்.

இந்நிலையில், இன்று திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள பழமை வாய்ந்த கொங்கணகிரி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கந்த பெருமான் திருக்கோவில் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் இன்று முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

வேண்டும் வரங்களை அள்ளித் தரும் கந்தப்பெருமான் கோவிலில் வருடம் தோறும் சூரசம்ஹாரம் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் சூரசம்ஹாரம் விழா பக்தர்கள் இன்றி கொண்டாடப்பட்டது.

தற்போது, ஊரடங்கு பல தளர்வுகள் இருந்தபோதிலும் பண்டிகை காலங்களில் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாகவும், விரைவில் தமிழக அரசு பண்டிகை காலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கிட வேண்டுமென்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...