திருப்பூர் பெருமாநல்லூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

மழைக்காலம் என்பதால் சாக்கடை வசதி இல்லாததால் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து, சாலைகளிலேயே தேங்கி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த காமாட்சி கார்டன் பொதுமக்கள் சார்பில் அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பெருமாநல்லூர் அடுத்த காமாட்சி கார்டன் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் சூழ்நிலையில், சாக்கடை வசதி, சாலை வசதி போன்றவைகள் இல்லாததை சுட்டிக்காட்டி சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மழைக்காலம் என்பதால் சாக்கடை வசதி இல்லாததால் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலைகளிலேயே தேங்குவதால் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் நோய்தொற்று ஏற்படும் சூழல் நிலவுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காமாட்சி கார்டன் பகுதியை பார்வையிட்டு சாலை வசதி, சாக்கடை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...