வடகிழக்கு பருவமழை களப்பணியில் தமிழக முதலமைச்சரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது - தமுமு மாநில செயலாளர் சாதிக் அலி..!

சூயஸ் குடிநீர் பணிக்காக குழிகள் தோண்டப்பட்டு மூடாததால், மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதாக குற்றம்சாட்டினார்.


கோவை: வடகிழக்கு பருவமழை களப்பணியில் தமிழக முதல்வரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக தமுமு மாநில செயலாளர் சாதிக் அலி தெரிவித்தார்.

கோவை உக்கடத்தில் உள்ள தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் மாநில செயலாளர் சாதிக் அலி கூறியதாவது;



சென்னை மழையால் பாதிக்கப்பட்டு பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. மழை தொடர்பான களப்பணியில், தமிழக முதல்வர் தளபதியின் பணி சிறப்பாக உள்ளது. நேரிடையாக களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்து வருகின்றார். மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகளையும் நியமித்துள்ளார்.

கோவை மாநகரில் 100 வார்டுகளில், கடந்த கால ஆட்சியில், பாதாள சாக்கடை பணிகள் முடிந்து சாலைகள் போடாததாலும், சூயஸ் குடிநீர் பணிக்காக குழிகள் தோண்டப்பட்டு மூடாததாலும், மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர் என குற்றம் சாட்டியவர், கோவையில் 6 மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாலாங்குளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று கூறினார்.

குறிப்பாக, 86வது வார்டில் கழிவுநீர் லாரி அங்கு கழிவுகளை கொட்டுவதால், கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும், வைரஸ் நோய், பன்றி காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இந்த கழிவு நீரை இங்கு கொட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகின்றது. தெருநாய்கள் பொதுமக்களை கடித்து வருகின்றது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தமுமுகவை பொறுத்த வரை, இயற்கை சீற்றங்களின் போது, எங்களின் தொண்டர்கள் களப்பணி ஆற்றி வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டங்களிலும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். 5 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் வைத்துள்ளோம். சென்னையில் 100க்கும் மேற்பட்ட சகோதரர்கள் களப்பணியில் உள்ளனர். கோவையில் களப்பணியாற்ற குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, மாவட்ட தலைவர் அகமது கபீர், மாவட்ட பொருளாளர் அப்பாஸ், மற்றும் முஜிப்பூர் ரகுமான், ஆசிக் அலி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...