வடகிழக்கு பருவமழை தீவிரம்..! கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க கே. வன்னிய பெருமாள் ஐபிஎஸ் நியமனம்..!

கோவையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அலைபேசி எண்கள் புகார்கள் மற்றும் உதவிக்காக கொடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், முன்னேச்சரிகை நடவடிக்கைகளை கண்காணிக்க கே. வன்னிய பெருமாள் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அலைபேசி எண்கள் புகார்கள் மற்றும் உதவிக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் 11-ந் தேதி வரை மிதமான மழை முதல் அதிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

மேலும், சென்னை வானிலை ஆய்வு மையமானது அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதனால், தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை முன்னேச்சரிகை நடவடிக்கைகளை கண்காணிக்க கே. வன்னிய பெருமாள் ஐபிஎஸ்யை தமிழக அரசு கோவை மாவட்டத்திற்கு நியமித்துள்ளது.

மேலும், கோவை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய வழிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தனித்தனியாக அலைபேசி எண்களை அறிவித்துள்ளது.

கொரோனா, பரவல் தொடர்ச்சியாக இருந்து வரும் நிலையில் இந்த வடகிழக்கு பருவமழையால் பெரிதும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மழையால் கோவை மாவட்ட சாலை எங்கும் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நீரில் கழிவு நீர் கலப்பதால் மக்களிடம் நோய் தொற்று பரவும் பயம் ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு ஏதேனும், புகார்கள் மற்றும் உதவிக்காக, கோவை தெற்கு, கணபதி, அன்னூர் என கோவையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...