கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்தி நகை பறித்த கொள்ளையனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு..!

பெண்ணை கத்தியால் குத்தி நகை பறித்த கொள்ளையனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


கோவை: கோவையில் பெண்ணை கத்தியால் குத்தி நகை பறித்த கொள்ளையனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை கணபதி காந்தி நகரைச் சேர்ந்தவர் பிந்து இன்ஜினியர். இவருடைய மனைவி ஆதிரா. கடந்த 15.10.2013 அன்று பிந்து மைசூருக்கு சென்றதால் ஆதிரா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்நிலையில், அன்று இரவு 10 மணி அளவில் வீட்டின் அழைப்பு மணி ஒழிப்பு கேட்டது. உடனே கதவைத் திறந்து பார்த்தார்.

அப்போது, அங்கு நின்றிருந்த வாலிபர் குடிக்கத் தண்ணீர் கேட்டார். பின்னர் வீட்டுக்குள் நுழைந்த அந்த வாலிபர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி ஆதிராவிடம் நகையை கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் ஆதிராவின் கழுத்தை அறுத்து விட்டு கத்தியால் குத்திவிட்டு சங்கிலியை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.

இதுகுறித்து புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதிராவிடம் நகை பறித்தது தொடர்பாக கோவை மரக்கடையைச் சேர்ந்த அரவிந்த் குமார் (27) என்பவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணபிரியா அரவிந்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, அரவிந்த்குமார் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...