கோவையில் பழுதடைந்த அடுக்குமாடி கட்டிடத்தில் வசிக்கக்கூடிய 48 குடும்பத்தினரை காலி செய்ய வருவாய்த் துறையினர் அறிவுறுத்தல்..!

கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கக்கூடிய 48 குடும்பங்களை காலி செய்ய அறிவுறுத்தியுள்ளது.


கோவை: கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கக்கூடிய 48 குடும்பங்களை காலி செய்ய வருவாய்த் துறை அறிவுறுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே வீட்டு வசதி வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் 960 வீடுகள் கட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த அடுக்குமாடி கட்டப்பட்டு பல ஆண்டுகளை கடந்துவிட்டாலும், போதிய பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்து காணப்படுகின்றன.



தற்போது இங்குள்ள பெரும்பாலான வீடுகள் காலியாக உள்ளன. 400க்கும் குறைவான வீடுகளில் மட்டும் மக்கள் வசித்து வருகின்றனர்.

மேலும், பழுதடைந்துள்ள இந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

இந்த நிலையில், கோவையில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சிங்காநல்லுர் அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாப்பு குறித்து கோவை தெற்கு ஆர்.டி.ஓ இளங்கோ தலைமையில் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்தனர்.

அப்போது, அவர்கள் கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், வீடுகள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் 48 வீடுகளைச் சேர்ந்த குடும்பங்கள் தற்காலிகமாக அந்த வீடுகளை காலி செய்து விட்டு வேறு இடங்களில் குடி இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...