கோவையில் சேற்றில் வழுக்கி விழுந்த யானை..! சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சோகம்.

கோவையில் கடந்த 6ஆம் தேதி சேற்றில் வழுக்கி விழுந்த யானை மீட்கப்பட்டு, வனத்துறை கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், இன்று அந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.


கோவை: கடந்த 6ம் தேதி கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் உள்ள தடாகம் காப்புக்காடு நாய்க்கன்பாளையம் அருகே இருக்கும் சிறிய பள்ளத்திற்குள் மழை ஈரத்தில் 8 வயது மிதக்கதக்க யானை ஒன்று வழுக்கி விழுந்தது. இந்த நிலையில், தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக களப் பணியாளர்கள் உடனடியாக சென்று பொக்லைன் உதவியுடன் பள்ளத்தை சீர்படுத்தி, யானையை மீட்டனர்.

தொடர்ந்து, யானைக்கு முதுமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் கோவனூர் கால்நடை உதவி மருத்துவர் வெற்றிவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர். பின்னர், புதர்ப்பகுதிக்குள் சென்ற யானையை களப்பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், அந்த யானை நேற்று காலை 7.00 மணியளவில் வனப்பகுதிக்கு வெளியே சுமார் 250 மீட்டர் தொலைவில் உள்ள பட்டா நிலத்திற்குள் வந்தது. உடல் நிலை மோசமான அந்த யானை அங்கேயே படுத்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த யானைக்கு முதுமலை வனக் கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இப்படியிருக்க, நோய்வாய்ப்பட்ட அந்த ஆண் யானை இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. யானையின் மரணம் வனத்துறையினரின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யானைக்கு பிரேத பரிசோதனை இன்று காலை நடைபெறுகின்றது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...