கோவையில் கணவன் கண் முன் விபத்தில் மனைவி பலி!

கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் கணவன் கண்முன்னே பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய போது மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் கணவன் கண்முன்னே பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சூலூர் அருகே உள்ள அரசூரை சேர்ந்தவர் சிவராஜ் இவரது மனைவி சசிகலா வயது 40. நேற்று முன்தினம் இவர் தனது கணவர் மற்றும் மகளுடன் மாண்டியா பாளையத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

தரிசனம் முடித்துவிட்டு ரெண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பினார். அப்பொழுது பொன்னான்டம்பாளையம் அருகே வந்தபோது சசிகலா மோட்டார் சைக்கிளிலிருந்து திடீரென தவறிக் கீழே விழுந்தார்.

தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்குப் போராடிய அவரை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு தென்னம்பாளையம் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...