டிஜிட்டல் உலகில் சைபர் பாதுகாப்பு அவசியம் என்பதால் சைபர் பாதுகாப்பு பொறியாளர்களின் தேவையும் அதிகரித்துள்ளதாக ஏஐசிடிஇயின் தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கோவை: டிஜிட்டல் உலகில் சைபர் பாதுகாப்பு அவசியம் என்பதால் சைபர் பாதுகாப்பு பொறியாளர்களின் தேவையும் அதிகரித்துள்ளதாக ஏஐசிடிஇயின் தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கோவை எஸ்என்எஸ் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் எஸ்என்எஸ் பொறியியல் கல்லூரி இணைந்து பிஇ மற்றும் பி.டெக் படிப்புகளில் சேர்க்கப்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான இண்டக்ஷன் ப்ரோக்ராம் எனப்படும் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏஐசிடிஇ புதுடில்லியின் தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் புத்தா சந்திரசேகர், காக்னிசன்ட் நிறுவனத்தின் மனிதவளத்துறை துணைத்தலைவர் மாயா ஸ்ரீகுமார், மற்றும் இந்திய பார்முலா1 பந்தய வீரர் சேத்தன் கொரடா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இதில் எஸ்என்எஸ் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ் செந்தூர்பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார். இதனைத்தொடர்ந்து எஸ்என்எஸ் கல்வி குழுமங்களின் தலைவர் எஸ்.எம்.சுப்பிரமணியன் தலைமை உரையாற்றினார்.
இதில் சிறப்பு விருந்தினராக உரையாற்றிய ஏஐசிடிஇயின் தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரி புத்தாசந்திரசேகர், நாட்டில் தற்பொழுது பொறியியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், நாட்டின் கல்வித்துறை பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளுக்கான நிதிகளை அதிக அளவு ஒதுக்கீடு செய்து பல்வேறு தொழில்நுட்பங்களையும் கண்டுபிடிக்க விதமாக மாணவர்களின் திறனை மேம்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் டிஜிட்டல் உலகில் தற்பொழுது அனைத்து பணிகளும் இணையவழி மூலம் நடப்பதால் குறிப்பாக வங்கிகள் மற்றும் பல்வேறு சேவை பணிகள் என அனைத்தும் இணையவழியில் நடைபெறுவதால் சைபர் பாதுகாப்பிற்கான தேவையும் அவசியமும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தவர் தற்போதுள்ள இந்த டிஜிட்டல் உலகில் அதிகளவிலான சைபர் பாதுகாப்பு பொறியாளர்களின் தேவை என்பது அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மாணவர்கள் தங்கள் விரும்பிப் படிக்கும் பாடப்பிரிவு பாடங்களை படிப்பதோடு அல்லாமல் வேலைவாய்ப்பிற்கான ஆளுமை திறன், தனித்திறன் மற்றும் தாய்மொழி மட்டுமல்லாது மற்ற மொழிகளின் கற்றல் தேவையும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தவர் பல்வேறு திறன்களையும் மாணவர்கள் கூடுதலாக வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
இதில் கல்லூரி பேராசியர்கள், முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.