கொடநாடு வழக்கு தொடர்பாக ஒரே நாளில் மூன்று விசாரணைகள் நடைபெற்றதால், நீதிமன்றம் பரபரப்பாகக் காணப்பட்டது. அதேபோல, நாளை மறுநாளும் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறவிருப்பதால் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
நீலகிரி: கொடநாடு வழக்கு தொடர்பாக ஒரே நாளில் மூன்று விசாரணைகள் நடைபெற்றதால், நீதிமன்றம் பரபரப்பாகக் காணப்பட்டது. அதேபோல, நாளை மறுநாளும் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறவிருப்பதால் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் கூடுதல் புலன் விசாரணை மூன்றாவது மாதத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், காவல்துறையின் தரப்பில் கேட்கப்பட்ட கூடுதல் கால அவகாசத்தை அளித்து, வருகின்ற 26-ம் தேதிக்கு இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்திருக்கிறார் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்சய் பாபா.
முக்கிய வழக்கு விசாரணை 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டாலும், கொடநாடு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் இதர மனுக்கள் மீதான விசாரணை ஊட்டியில் இன்று நடைபெற்றது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இந்த வழக்கின் 11 மற்றும் 12-வது குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு, சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
சென்னை மழை வெள்ளம் காரணமாக கொடநாடு வழக்கின் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகின்ற 12-ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என அரசுத் தரப்பில் வாதிக்கப்பட்டது.
அதேபோல, வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை வருகின்ற 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதைத் தொடர்ந்து கொடநாடு வழக்கின் 2-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் வாளையாறு மனோஜுக்கு, கடந்த ஜூலையில் ஜாமீன் வழங்கப்பட்டும், சில நிபந்தனைகளால் சிறையிலிருந்து வெளி வர முடியாமல் இருக்கிறார்.
மனோஜின் ஜாமீன் நிபந்தனையை மேலும் தளர்த்த வேண்டும் என மனோஜ் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அது தொடர்பான விசாரணை நாளை மறுநாள் நடைபெறவிருக்கிறது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இந்த நிலையில், தனபால், ரமேஷ் ஆகியோரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைவதால், போலீஸார் இருவரையும் கூடலூர் கிளைச் சிறையிலிருந்து அழைத்து வந்து, நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதி இருவருக்கும் மேலும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் கூடலூர் கிளைச் சிறைக்கே அழைத்துச் செல்லப்பட்டனர்.
கொடநாடு வழக்கு தொடர்பாக ஒரே நாளில் மூன்று விசாரணைகள் நடைபெற்றதால், நீதிமன்றம் பரபரப்பாகக் காணப்பட்டது. அதேபோல, நாளை மறுநாளும் இவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறவிருப்பதால் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.