தொடர் கனமழை: ஆழியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு-கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், 11-மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பொள்ளாச்சி: மேற்குத்தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், 11-மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காடம்பாறை மற்றும் அப்பர் ஆழியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் வடகிழக்கு பருவ மழையால் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2400-கன அடியாக அதிகரித்து உள்ளது. இதனால், அணையின் முழு கொள்ளளவான 120-அடியை எட்டியது.



இதனையடுத்து, ஆழியாறு அணையின் பாதுகாப்பு கருதி 11-மதகுகள் வழியாக வினாடிக்கு 2400-கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆழியாறு சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் ஆனைமலை, அம்பராம்பாளையம் மற்றும் கோபாலபுரம் ஆற்றங்கரை பகுதியில் உள்ள வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...