கோவையில் கட்டுமான பணியின் போது மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி.!

கட்டுமான பணியின் போது முதல் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


கோவை: கட்டுமான பணியின் போது முதல் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கோவையை அடுத்த ஆலந்துறை காரிமங்கலம் பட்டம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாபு 34, சென்ட்ரிங் தொழிலாளி. இவர் நேற்று சின்ன தடாகம் வீரபாண்டி ரோட்டில் ஒரு புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது முதல் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...