கோவையில் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் - மெசேஜ் அனுப்பி பணம் மோசடி.!

வீட்டிலிருந்தபடி வருமானம் ஈட்டலாம் என்று தகவல் அனுப்பி ஆன்லைன் மூலம் கோவையைச் சேர்ந்தவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: வீட்டிலிருந்தபடி வருமானம் ஈட்டலாம் என்று தகவல் அனுப்பி ஆன்லைன் மூலம் கோவையைச் சேர்ந்தவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை நகரில் ஆன்லைன் மூலம் மோசடி நடைபெறுவது அதிகரித்து உள்ளது. வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு எண், ரகசிய குறியீடு எண்ணை பெற்று மோசடி, போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் வசூலிப்பது என்று மோசடிகள் அரங்கேறுகின்றன.

கொரோனா பரவலுக்குப் பின்னர் வீட்டிலிருந்து வேலை செய்வது அதிகரித்து வருகிறது. அதை பயன்படுத்தியும் மோசடி நடைபெறுகிறது.

இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

பகுதி நேர வேலையாக வீட்டிலிருந்தபடி வருமானம் ஈட்டலாம் என்ற தகவலுடன் வாட்ஸ்அப் மூலம் ஒரு லிங்க் முகவரி அனுப்பப்படுகிறது. அதில், பிரபல தனியார் நிறுவனங்களில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் வீட்டிலிருந்தபடியே தினமும் ரூ.900 வருமானம் ஈட்டலாம் என்று அறிவிக்கிறார்கள்.

அதை நம்பி, அந்த லிங்கை ஓபன் செய்து பதிவு செய்து, முதலில் ரூ.200 செலுத்தினால் ரூ.350 கொடுக்கிறார்கள். அதைத்தொடர்ந்து ரூ.1000 செலுத்தினால் ரூ.2 ஆயிரம் தருவார்கள். அந்த ஆசையில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை முதலீடு செய்த கோவையைச் சேர்ந்த பலரும் லட்சக்கணக்கான பணத்தை இழந்து தவிக்கிறார்கள்.

இது போன்ற மோசடியில் சிக்கி பணத்தை இழந்த பலர் கோவை நகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கின்றனர். பெண்களிடம், அழகு சாதன பொருட்களை விற்பனை செய்வதில் முதலீடு செய்யலாம் என்றும், ரெடிமேடு ஆடைகள், செல்போன் விற்பனை செய்யலாம் என்று ஆண்களுக்கும் லிங்க் அனுப்பி மோசடி செய்யப்படுகிறது.

எனவே ஆன்லைன் மூலம் நடைபெறும் மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்காமல் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு சைபர்கிரைம் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...