வடகிழக்கு பருவமழை தீவிரம்; வால்பாறையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு..!

வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆறு மற்றும் மழையினால் சாலை அருகில் புதிதாக தோன்றும் நீர் வீழ்ச்சிகளில் குளித்து வருகின்றனர்.


கோவை: வால்பாறையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வடகிழக்கு பருவமழை பல்வேறு பகுதிகளில் மிக தீவிரம் அடைந்து நிலையில், பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் 11 மாவட்டங்களுக்கு பள்ளிகளும், கல்லூரிகளும் விடுமுறை தமிழகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆற்றில் குளித்து விளையாடி வருகின்றனர். மேலும், மழையினால் சாலை அருகில் புதிதாக தோன்றும் நீர் வீழ்ச்சிகளில் குளித்து வருகின்றனர்.

வனப்பகுதியில் கன மழை பெய்தால் ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சுற்றுலாப் பயணிகளுக்கு தெரியாது என்பதால் கூழாங்கல் ஆற்றில் விளையாடிய சுற்றுலா பயணிகளுக்கு காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து விழிப்புணர்வு வழங்கினர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...