ஆத்துப்பாலம் சந்திப்பில் மண் கொட்டி சாலையை சீர்செய்த போக்குவரத்து காவலர்கள்.!

கோவை ஆத்துப்பாலம் சந்திப்பில் சாலை முழுவதுமாக சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருவதைப் பார்த்த போக்குவரத்து காவலர்கள் சாலையில் மண்ணை கொட்டி, சாலையைச் சீர் செய்தது, மக்களிடம் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.



கோவை: கோவை ஆத்துப்பாலம் சந்திப்பில் சாலை முழுவதுமாக சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருவதைப் பார்த்த போக்குவரத்து காவலர்கள் சாலையில் மண்ணை கொட்டி, சாலையைச் சீர் செய்தது, மக்களிடம் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, கோவையில் இரு தினங்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் பேர் அவதி அடைந்து வருகின்றனர்.

குறிப்பாக, கோவையில் பால வேலைகள் நடைபெறும் உக்கடம், கவுண்டம்பாளையம், திருச்சி சாலை போன்ற பகுதிகளில் உள்ள சாலைகள் சேரும் சகதியுமாக உள்ளதால், உயிரைப் பணயம் வைத்துச் செல்ல வேண்டிய சூழலில் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.



இந்த நிலையில், கோவையின் ஆத்துப்பாலம் சந்திப்பு, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்வோர் பயன்படுத்தும் மிக முக்கிய சந்திப்பில், சாலை பயணிக்க முடியாத அளவிற்கு மிக மோசமாக உள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அங்கு பணியிலிருந்த போக்குவரத்து காவல் துறையினர் களத்தில் இறங்கி சாலையைச் சரி செய்த செயல் அப்பகுதி மக்களின் மற்றும் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளின் பாராட்டுக்களைப் பெற்றது.

அடுத்த ஒரு வாரத்திற்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சாலையைச் சரி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறையினருக்கு,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...