நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை- பவானி ஆற்றில் 6,500-கன அடி தண்ணீர் திறப்பு!

பவானி ஆற்றில் 6,500 -கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை. கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


பவானி: பவானி கரையோரப் பகுதியை வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 4 ஆயிரம் கனஅடி நீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது.

இன்று மேலும் அதிகரித்து 6 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 104 அடியை நெருங்கி உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.



இந்நிலையில் இன்று பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.72 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6,757 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,500 கன அடியும், பவானி ஆற்றுக்கு 6 ஆயிரத்து 500 கன அடி என மொத்தம் 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.



பவானி ஆற்றில் 6,500 கன அடி நீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் கன அடிக்கு மேல் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருக்கும் என்பதால் பவானி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பவானி கரையோரம் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளை நீர்நிலைகளில் குளிப்பாட்டக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பவானி கரையோரப் பகுதியை வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...