தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற 8 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையில் ஆன்லைன் மூலமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கணவன், மனைவி உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவையை அடுத்த துடியலூர் சுப்பிரமணி பாளையம் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் ஜெகதீஷ் (50), அவருடைய மனைவி கோகிலா தேவி (42) ஆகியோர் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுபோல், அந்தப் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற 6 பேரை சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூபாய் 5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.