குளத்தில் தவறி விழுபவர்களை எப்படி காப்பாற்றுவது? கோவையில் தீயணைப்பு படையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

கோவை மாவட்டம் பேரூர் குளத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மீட்புப்பணி ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் பேரூர் குளத்தில், நீச்சல் தெரியாமல் தண்ணீரில் விழுந்த நபரை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



கோவை மாவட்டம், கோவைபுதூர் தீயணைப்பு நிலைய அலுவலர், ரவிச்சந்திரன் மற்றும் கோவைப்புதூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய பணியாளர்களுடன் இன்று காலை, பேரூர் பெரியகுளத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மீட்புப்பணி ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில், குளத்தில் தவறி விழுந்து உயிருக்காக போராடும், ஒரு நபரை உயிருடன் மீட்பது எப்படி என்றும், தற்போது வடகிழக்கு பருவமழை பல்வேறு பகுதிகளில் அதிகமாக பெய்து வருகின்றது.



அப்படி மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதுகாப்புடன் இருப்பது எப்படி எனவும், நிலைய பணியாளர்கள் பொதுமக்களுக்கான விழிப்புணர்வை தகுந்த உபகரணங்களுடன் விளக்கி, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.



மேலும், தண்ணீரில் யாரும் தவறி விழுந்து விட்டால், உடனடியாக அவர்களுக்கு என்னென்ன முதலுதவி செய்ய வேண்டும், என்னென்ன உதவிகளை செய்தால் அவர்களை காப்பாற்ற முடியும் எனவும் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...