கோவையில் கனமழையால் அவிநாசி சாலையில் மரம் விழுந்து விபத்து - ஆள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.



கோவை: கோவை அவினாசி சாலையில் உள்ள காவலர் சமுதாயக்கூட வளாகத்தில் இருந்த 20 ஆண்டுகள் பழமையான பூவன் மரம் ஒன்று கனமழையால் வேரோடு சாய்ந்து விழுந்தது.

கோவையில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை தொடங்கி நள்ளிரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி உள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.



இதனிடையே, கோவை - அவினாசி சாலை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள காவலர் சமுதாயக்கூட வளாகத்தில் 20 ஆண்டுகள் பழமையான பூவன் மரம் ஒன்று கனமழையால் வேரோடு சாய்ந்து அவினாசி சாலையில் விழுந்தது.



போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதியில் அதிகாலை நேரம் என்பதால், ஆள் நடமாட்டம் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், மரம் வெட்டும் இயந்திரங்கள் மற்றும் பொக்லைன் உதவியுடன் சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போல, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் .3 க்குட்பட்ட கள்ளிமடை ஆணையங்காடு சுடுகாடு வளாகத்தில் மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 



Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...