பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 5 -ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேங்காய் உடைக்கும் தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கோவை:பொள்ளாச்சியில் 5 -ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேங்காய் உடைக்கும் தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் கிரிநாத் வயது 21, அதே பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவியிடம் நட்பாகப் பழகி வந்தார். அப்போது அவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தச் சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அப்போது அவர்கள் கிரிநாத்தைக் கண்டித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த மாணவி வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்றார்.
அப்போது அங்கிருந்த கிரிநாத் மீண்டும் அந்த மாணவியிடம் கன்னத்தைக் கிள்ளி தனது வீட்டிற்கு வருமாறு சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி வீட்டுக்கு ஓடிச் சென்று பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை அவரது நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு கிரிநாத் வீட்டுக்குச் சென்றார். அங்கு இருந்த கிரிநாத்தை அவர்கள் சரமாரியாகத் தாக்கினர். அவரின் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
பின்னர் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதுபோன்று சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பர் தாக்கியதாக கிரிநாத் ஆனைமலை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.