கோவை மாநகராட்சியில் மண்டல வாரியாக ஜேசிபி வாகனம் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு!

கோவை மாநகராட்சி பகுதிகளில் ஏற்படும் புயல், மழை, வெள்ளம் மற்றும் எரியாத தெருவிளக்குகள் தொடர்பாக பொது மக்களிடமிருந்து புகார்கள் பெறுவதற்கு 24 மணி நேர சேவை பிரிவு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் ஜேசிபி வாகனம் மற்றும் டிரைவருடன் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு.


கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் ஏற்படும் புயல், மழை, வெள்ளம் மற்றும் எரியாத தெருவிளக்குகள் தொடர்பாக பொது மக்களிடமிருந்து புகார்கள் பெறுவதற்கு 24 மணி நேர சேவை பிரிவு செயல்பட்டு வருகிறது.

இதில் பெறப்படும் புகார்களை உடனடியாக உரிய பதிவேட்டில் பதிவு செய்து, பெறப்பட்ட தகவலை அதன் முக்கியத்துவம் கருதி மாநகராட்சி கமிஷனர், பொறியாளர், செயற்பொறியாளர், நகர் நல அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர்களுக்கு தொலைப்பேசி மூலம் உடனுக்குடன் விவரத்தைத் தெரிவிக்க இளநிலை உதவியாளர்கள் அந்தஸ்தில் உள்ள பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல் மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல் ஒவ்வொரு மண்டலத்திலும் ஜேசிபி வாகனம் மற்றும் டிரைவருடன் தயார் நிலையில் வைத்திருக்கவும், மின்சாரம் தொடர்பான ஆபரேட்டர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...