தாராபுரம் சாலையில் மதுபான கூடம் அருகே ஒருவர் கொலை... போலீசார் விசாரணை!

திருப்பூர்- தாராபுரம் சாலையில் செயல்பட்டு வரும் மதுக் கூடத்தில், நடுத்தர வயது நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். உயிரிழந்தவரின் வயது சுமார் 45-முதல் 50- வயதுக்குள் இருக்கலாம். அவர் யார், எந்த ஊர் என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.


திருப்பூர்: திருப்பூர்- தாராபுரம் சாலையில் செயல்பட்டு வரும் மதுக் கூடத்தில், நடுத்தர வயது நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்- தாராபுரம் சாலையில் செயல்பட்டு வரும் மதுக் கூடத்தில், நேற்று முன்தினம் இரவு மது அருந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர், மது அருந்திவிட்டு போதையில் அங்கேயே படுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று அதிகாலை அங்கிருந்த இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தவருக்கும், படுத்திருந்த நபருக்கும் தகராறு ஏற்பட்டது.

வாகனம் எடுக்க வந்த நபர், கல்லால் தாக்கியதாகவும், அதில் அங்கு படுத்திருந்த நபர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தெற்கு போலீசார், அங்கிருந்த நபரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்தவரின் வயது சுமார் 45 முதல் 50 வயதுக்குள் இருக்கலாம். அவர் யார், எந்த ஊர் என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.

இது தொடர்பாக, தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தை மாநகரக் காவல் துணை ஆணையர் அரவிந்த் நேற்று ஆய்வு செய்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...