கோவை குற்றாலத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

கோவை மாவட்டம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை: கோவை மாவட்டம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவிக்கு நீர்வரத்து அதிகளவில் உள்ளது. திடீர், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக, பல மாதங்களாக இருந்த கோவை குற்றாலம் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அரசு வழிகாட்டுதலின்படி நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த மாதம் 6-ந் தேதி முதல் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டன. இதனால், கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து அருவியில் சுற்றுலா பயணிகள் நீராடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், சிறுவாணி நீர்பிடிப்பு பகுகளில் கனமழை பெய்ததால், அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், கடந்த மாதம் 10-ந் தேதி முதல் கோவை குற்றாலம்4 நாட்கள் மூடப்பட்டது. அதன்பிறகு, நீர் வரத்து ஓரளவு குறைந்ததால், மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.



இந்த நிலையில், தற்போது கோவை மாவட்டம் முழுவதும் வடகிழக்கு மழை பரவலாக பெய்து வருவதால், கோவை குற்றால அருவியில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவை குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகள் வர மீண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது, எனவும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என

வனத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...