மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் அம்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளி, கே.கே.புதூர் அரசு பள்ளி, சித்தாபுதூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி மற்றும் ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மருத்துவ முகாம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது.



கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்களின் நலனை காக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இம்மாநகராட்சியில் பணிபுரியும் 2,740 நிரந்த துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்த ஆணையாளர் தலைமையில் சிஐஐ, ஐடிசி மற்றும் துப்புரவு பணியாளர்களின் சங்கங்கள் ஆகியோருடன் நவம்பர் மாதம் ஆலோசனை நடத்தி துப்புரவு பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் மண்டல வாரியாக சனிக்கிழமைகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் ஏறத்தாழ 1000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கடந்த 2 வாரமாக ஒவ்வொரு வார்டிலும் நேரில் சென்று துப்புரவு பணியாளர்கள் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அதன் அறிக்கை இன்று வழங்கப்பட்டது.

மேலும், இந்த மருத்துவ முகாமில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை, கே.ஜி மருத்துவமனை, பி.எஸ்.ஜி. மருத்துவமனை, இராமகிருஷ்ணா மருத்துவமனை, குப்புசாமிநாயுடு மருத்துவமனை, ஜெம் மருத்துவமனை, கங்கா மருத்துவமனை, சங்கரா மருத்துவமனை மற்றும் தைரோகேர் ஆகிய முன்னனி மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பான சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நகரின் துய்மையை பாதுக்காக்கும் துப்புரவு பணியாளர்கள் தங்கள் உடல்நிலையை பேணிக்காக்க சிறப்பு மருத்துவங்களான தோல் சிகிச்சை, கண் சிகிச்சை, நுரையீரல் பாதுகாப்பு சிகிச்சை, இதயம் சார்ந்த சிகிச்சைகள், பொது மருத்துவம் மற்றும் பெண் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு தனி சிகிச்சை பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  



மேலும், இதில் ஒவ்வொரு துப்புரவு பணியாளர்களுக்கும் தனித் தனியாக சிகிச்சையளிக்கப்பட்ட விவரம் சார்ந்த கோப்புகள் வழங்கப்பட்டது. நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால் இந்த கோப்பை கொண்டு முன்னுரிமை வழங்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும். இந்த முகாமில் பரிசோதனை மேற்கொண்டு பணியாளர்களுக்கு தேவையான மருந்துகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். இம்முகாமில் கலந்து கொண்ட மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளுக்கும் ஆணையாளர் அவர்கள் நன்றி தெரிவித்தார். 



மேலும், மாநகராட்சியில் தூய்மைப்பணியை மேற்கொள்ளும் துப்புரவு பணியாளர்கள் தங்கள் உடல்நிலையை பேணிகாக்கவும் இந்த மருத்துவ முகாமை முறையாக பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளவும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். மீதமுள்ள கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு வரும் சனிக்கிழமைகளில் மருத்துவ முகாம் நடைபெறும் என ஆணையாளர் தெரிவித்தார்.                                                        
 
இம்மருத்துவ முகாமில் மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையாளர் (பொ)மோகனசுந்தரி, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் ராமைய்யா, மத்திய மற்றும் மேற்கு மண்டல சுகாதார அலுவலர்கள், ரமணி, சங்கரா மருத்துவமனை, பிரவீன் ஜெம் மருத்துவமனை, சிஐஐ குழும உறுப்பினர்கள், ஐடிசி தன்னார்வ நிறுவன ஊழியர்கள் மற்றும் துப்புரவு சங்க உறுப்பினாகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...