கோவை கிணத்துக்கடவு அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது..!

மேலும், சேவல் சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு சேவல்கள், ரூ.1,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையத்தில் சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் காரச்சேரி சாலை பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டையில் சிலர் ஈடுபட்டு வருவதாக கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அரசம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலை பின்புறம் சிலர் பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், அங்கு சேவல் சண்டையில் ஈடுபட்ட கோவை செட்டிபாளையம் பெரியகுயிலி, பஞ்சாயத்து ஆபீஸ் வீதியைச் சேர்ந்த சிவக்குமார் (41), காரசேரி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (31) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், சேவல் சண்டைக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு சேவல்கள், 1,500 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...