கோத்தகிரி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் கரடி நடமாட்டம் - கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்குக் கோரிக்கை..!

கடந்த மூன்று நாட்களாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி வீடுகளின் முன்பக்க நுழைவு வாயில் மீது ஏறி மக்களை அச்சுறுத்த துவங்கியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


நீலகிரி: கோத்தகிரி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில், மீண்டும் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்களின் பாதுகாப்பு கருதி கூண்டு வைத்து கரடியை பிடிக்க வனத்துறைக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் சில நாட்களாக கரடி ஒன்று உலா வருகிறது.

இந்த கரடி இரவு நேரங்களில் கடைவீதி, குடியிருப்பு ஆகிய பகுதிகளில் உலா வரும் நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி வீடுகளின் முன்பக்க நுழைவு வாயில் மீது ஏறி மக்களை அச்சுறுத்த துவங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டின் வாசலில் கரடி உலா வந்த சிசிடிவி கேமரா பதிவு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



எனவே அப்பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி, வனத்துறையினர் மக்கள் நடமாடும் பகுதியில் உலாவரும் கரடியைப் பிடிப்பதற்கு அப்பகுதியில் கூண்டு வைக்க கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...