இரண்டு முறை விருது வாங்கிய வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி காலம் 15ம் தேதியுடன் முடிவு..!

13வது துணை வேந்தராக குமார் அவர்களின் பதவிக் காலம் வரும் 15ம் தேதியுடன் முடிவடைவதால் 14வது துணை வேந்தரை தேர்ந்து எடுக்க துணை வேந்தர் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: இரண்டு முறை விருது வாங்கிய வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி காலம் 15ம் தேதியுடன் முடிவு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தரின் பதவி காலம் வரும் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. துணை வேந்தர் தேடுதல் குழுவிடம் துணை வேந்தர் பதவிக்கான விண்ணப்பம் வரும் 30ம் தேதி வரை அளிக்கலாம்.

கோவை லாலி ரோட்டில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் 1971ம் ஆண்டு நிறுவப்பட்டது. வேளாண்மைத்துறை முன்னேற்றத்தில் இப்பல்கலைகழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, தமிழகத்தில் வேளாண்மை துறையின் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பல்கலைகழகம் வேளாண் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க சேவைகள் போன்றவைகளை வழங்குகிறது.

மேலும், வேளாண்மையில் நடைமுறையில் மற்றும் வருங்காலத்தில் தோன்றும் சவால்களை சந்தித்து உயர்தர மனித வளத்தை உருவாக்குகின்றது. அதோடு இல்லாமல் ஆயிரக்கணக்கான உழவர்களுக்கு மற்றும் விரிவாக்கத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பண்ணை தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், தொழில்முனைவோர் முன்னேற்றத்திற்குத் திறமையான பயிற்சி மற்றும் பயனீட்டாளர்களுக்கு சேவையும் தருகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவியல் சார்ந்த முன்னேற்றத்திற்கும், மற்றும் உழவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 13வது துணை வேந்தராக குமார் உள்ளார். இவரது பதவி காலம் வரும் 15ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனிடையே, 14வது துணை வேந்தரை தேர்ந்து எடுக்க துணை வேந்தர் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிடம் வரும் 30ம் தேதிக்குள் துணை வேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம். இதில் தகுதி உடையவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதில் குழு சார்பாக வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் கவர்னரிடம் வழங்கப்படும்.

தற்போது உள்ள துணை வேந்தர் குமார், கடந்த ஆண்டின் சிறந்த துணை வேந்தருக்கான விருதினை பெற்றுள்ளார். தேசிய தமிழ் அறிவியல் கழகம் சார்பாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர் இதுவரை இரண்டு முறை சிறந்த துணை வேந்தருக்கான விருதினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...