கோவை கிணத்துக்கடவு ரயில் நிலையத்தை எம்.எல்.ஏ., செ.தாமோதரன் திடீர் ஆய்வு..!

மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்து ரயில்கள் இயக்க அனுமதித்தும் இதுவரை போத்தனூர்- கிணத்துக்கடவு- பொள்ளாச்சி இடையே ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளதால் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: போத்தனூர் - கிணத்துக்கடவு - பொள்ளாச்சி இடையே உள்ள அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்து மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் அனுமதி அளித்துள்ளார்.

இந்நிலையில், மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்து ரயில்கள் இயக்க அனுமதித்தும் இதுவரை போத்தனூர்- கிணத்துக்கடவு- பொள்ளாச்சி இடையே ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளது.

மேலும், ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளதால் கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு கிணத்துக்கடவு ரயில் நிலையம் மூடும் நிலைக்கு வந்துள்ளது.



இந்நிலையில், இன்று கிணத்துக்கடவு ரயில் நிலையத்திற்கு திடீரென வந்த கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., செ.தாமோதரன் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.



மேலும், ரயில் நிலையத்தில் இருந்த பணியாளர்களிடம் ரயில் நிலையம் குறித்து கேட்டறியப்பட்டது.

பல கோடி ரூபாய் செலவு செய்து மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைந்து போத்தனூர்- கிணத்துக்கடவு- பொள்ளாச்சி இடையே ரயில்களை இயக்க பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளரிடம் சந்திக்க உள்ளதாகவும், மேலும் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ரயில் நிலையம் பாலக்காடு கோட்டத்துடன் இருப்பதால் பல்வேறு பணிகள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளதால், தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம் சந்தித்து பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு ரயில் நிலையத்தை சேலம் மற்றும் மதுரை கோட்டத்தில் இணைக்க கோரிக்கை வைக்கப்படும் என்று எம்.எல்.ஏ., செ.தாமோதரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...