கோவையில் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசுகளை வெடித்ததால் காற்று மாசு அளவு 4 மடங்கு அதிகரிப்பு..!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தீபாவளிக்கு முன்னர் 32 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இருந்த நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாள் 124 ஆகவும், தீபாவளியன்று 203 அளவும் அதிகரித்தது.


கோவை: கோவையில் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசுகளை வெடித்ததால் காற்று மாசு அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது.

இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கூறியதாவது:-

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் பி.எம்.10 எனப்படும் காற்றில் மிதக்கும் துகள்கள் பி.எம். 2.5 எனப்படும் காற்றில் மிதக்கும் நுண்ணிய துகள்கள் சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் பெராக்சைடு ஆகியவை குறித்து கடந்த 28-ம் தேதி முதல் ஆய்வு செய்யப்பட்டது.

கவுண்டம்பாளையத்தில் தீபாவளிக்கு முன்னர் பி.எம்.10 எனப்படும் காற்றில் மிதக்கும் துகள்கள் 23 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இருந்த நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாள் புதன்கிழமை 157 ஆகவும், தீபாவளி அன்று 250 ஆகவும் அதிகரித்தது.

இதேபோல, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தீபாவளிக்கு முன்னர் 32 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இருந்த நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாள் 124 ஆகவும், தீபாவளியன்று 203 அளவும் அதிகரித்தது.

பி.எம்.10 எனப்படும் காற்றில் மிதக்கும் துகள்கள் அதிகபட்சமாக 100 வரை இருக்கலாம். இதன் மூலம் கோவையில் தீபாவளி அன்று காற்று மாசு அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், குடியிருப்பு பகுதிகளில் ஒலி மாசு 55 டெசிபல் வரை இருக்கலாம். வழக்கமாக கவுண்டம்பாளையம் பகுதியில் 62 டெசிபல் வரை இருக்கும் ஒலி மாசு தீபாவளியன்று 73 டெசிபல் ஆகக்கூடியது.

இதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் தீபாவளிக்கு முன்னர் 59 டெசிபல்லாக இருந்த ஒலி மாசு தீபாவளி அன்று 64 டெசிபல் ஆக அதிகரித்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...