கோவை அருகே கல்லுக்குழிகுள் மூழ்கி டிரைவர் பரிதாபமாக பலி..!

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


கோவை: கோவை அருகே கல்லுக்குழிகுள் மூழ்கி டிரைவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த கணுவாய் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (38) லாரி டிரைவர். இவர் தீபாவளியன்று மதுபோதையில் தனது வீட்டின் அருகில் தண்ணீர் நிரம்பிய கல் குழியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். ஆழமான பகுதிக்குள் சென்ற அவர் நீரில் மூழ்கினார்.

இதனை பார்த்த அவரது அண்ணன் சீனிவாசன் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்கப் போராடினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் கல்லுக்குழிக்குள் இறங்கி தேடினர். சில மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் ஜெயக்குமார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தீபாவளி அன்று கல்லு குழிக்குள் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...