கோவை பேரூரில் கனமழையால் வீடு இடிந்து விழுந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக மூவர் உயிர் தப்பினர்..!

பேரூர் மத்திபாளையம் பகுதியில் கனமழையால், வீட்டின் சுவர் வெளிப்புறமாக இடிந்து விழுந்ததால், வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


கோவை: கோவை அருகே பேரூர் பகுதியில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மூவர் உயிர் தப்பினர்.

கோவை தொண்டாமுத்துார் வட்டாரத்தில், ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக, பள்ள ஓடை, நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

இந்நிலையில், கன மழையின்போது, மத்திபாளையம், தெற்கு வீதியைச் சேர்ந்த பெரிய பாப்பாத்தி என்பவரின் வீட்டின் பக்கவாட்டுச்சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது. வீட்டுக்குள் பாப்பாத்தி, அவரது தங்கை மற்று தம்பி ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, வீட்டின் சுவர் வெளிப்புறமாக இடிந்து விழுந்ததால், வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அதேபோல, மத்திபாளையம், வடக்கு வீதி கார்த்தி என்பவரது வீட்டின் சுவரும், மழையின் போது இடிந்து விழுந்தது. பழைய வீடு என்பதால், யாரும் வசிக்கவில்லை.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...