கோவையில் அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 39-பேர் மீது வழக்கு!

காலை 6-மணி முதல் 7-மணி வரையிலும், மாலை 7-மணி முதல் 8-மணி வரையில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 39-பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 39 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதைத் தடுக்க ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவ 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை மீறி அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தைத் தவிர்த்து பட்டாசு வெடித்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை மீறி கோவை புறநகர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததாக பெரிய நாயக்கன் பாளையம் சப்&டிவிசனில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேரூர் சப்&டிவிசனில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். கருமத்தம் பட்டி சப்&டிவிசனில் 5 வழக்குகளும், பொள்ளாச்சி சப்டிவிசனில் 4 வழக்குகளும், வால்பாறை சப்& டிவிசனில் 5 வழக்குகளும், மேட்டுப்பாளையம் சப்&டிவிசனில் 3 வழக்குகளும் என மொத்தம் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகரில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் மொத்தமாக 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...