வால்பாறையில் பி.எஸ்.என்.எல் குடியிருப்பில் மின் கசிவு மின்சாரம் துண்டிப்பு!

வால்பாறையிலுள்ள பி.எஸ்.என்.எல் குடியிருப்பில் மின்கசிவு ஏற்பட்டு மின் வயர்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அந்த குடியிருப்பு முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்ததால் குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.


கோவை: வால்பாறையிலுள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பில் மின்கசிவு ஏற்பட்டு மின் வயர்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அந்த குடியிருப்பு முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்ததால் குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்தும், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கியும், வெகு சிறப்பாக கொண்டாடினர்.

இந்நிலையில், மழையும் பெய்தது அந்த சமயத்தில் வால்பாறையில் உள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பில் மின்கசிவு ஏற்பட்டு மின் வயர்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனால் அந்த குடியிருப்பு முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்ததால் குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.

இந்நிலையில் தகவலறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் மின்சார துறையினர் துரித நடவடிக்கையில் ஈடுபட்டு மின் கம்பிகளில் எரிந்த தீயை அணைத்துள்ளனர்.

இச்சம்பவத்தால் 12-குடியிருப்புகள் கொண்ட அந்த குடியிருப்பில் ஏ-பிளாக்கில் உள்ள ஆறு வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த குடியிருப்பு கடந்த 1996-ஆம் ஆண்டு கட்டப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட துறையினர் தெருவிளக்கு, மின்கம்பிகள் பராமரிப்பு எதுவும் செய்வதில்லை என்றும், குடியிருப்பைச் சுற்றிலும் அடர்ந்த முட்புதர்கள் இருப்பதால் சிறுத்தைப்புலியின் வாழ்விடமாக திகழ்ந்து வரும் நிலையில், அதை அகற்றும் பணியும் செய்வதில்லை என்றும் இதுபோன்ற நிலை நீடிக்காமல் சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...