கோவையில் பட்டாசு விற்பனை மந்தம்: வியாபாரிகள் வருத்தம்.!

மழை மற்றும் நீதிமன்ற உத்தரவு காரணமாகப் பட்டாசு விற்பனை 20-சதவீதம் குறைந்து மந்தமானதாக பட்டாசு விற்பனையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


கோவை: மழை மற்றும் நீதிமன்ற உத்தரவு காரணமாகப் பட்டாசு விற்பனை 20 சதவீதம் குறைந்து மந்தமானதாக பட்டாசு விற்பனையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி என்றாலே பொதுமக்கள் மிகவும் உற்சாகத்தோடு முதலில் வாங்குவது பட்டாசு தான். பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது மக்கள் மகிழ்ச்சியாகக் கருதுவார்கள். நரகாசுரன் அளிக்கப்பட்டதைப் பட்டாசு வெடித்துத் தெரிவிப்பதே தீப ஒளி திருநாளில் முக்கிய அம்சமாகும்.

இருந்தாலும் இந்த ஆண்டு மழை மற்றும் நீதிமன்ற உத்தரவு காரணமாகப் பட்டாசு விற்பனை 20 சதவீதம் குறைந்து மந்தமானதாக பட்டாசு விற்பனையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா காரணமாகவும், நீதிமன்ற தீர்ப்பு காரணமாகவும், இந்தாண்டு தீபாவளிக்குப் பட்டாசு விற்பனை குறைந்துள்ளது.

தீபாவளி என்றாலே மக்கள் முதலில் 'பர்ச்சேஸ்' செய்வது பட்டாசு தான். ஒரு காலத்தில் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே தெருக்களில் பட்டாசு சத்தம் காதை கிழிக்கும். கடந்தாண்டு, கொரோனா முதல் அலை ஊரடங்கின் போது, வழக்கத்தை விட குறைவாகவே பட்டாசுகள் விற்பனை ஆனது.

இந்த ஆண்டு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், புது புது ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன. பசுமை பட்டாசுகளும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது.

ஆனால் விற்பனை கடந்த ஆண்டை விட, மேலும் 20 சதவீதம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

பூ மார்க்கெட் பகுதியிலுள்ள, 'குட்வில் கிராக்கர்ஸ்' கடை உரிமையாளர் உமாசங்கர் கூறுகையில், " போன வருஷத்தை விட இந்த வருஷம், 20 சதவீதம் விற்பனை குறைவாகத்தான் இருந்துச்சு. முதல் அலையின்போது கூட மக்கள் கையில் பணம் இருந்தது.

இந்த ஆண்டு விற்பனை மிகவும் 'டல்'. ஐந்தாயிரத்திற்குப் பட்டாசு வாங்கும் இடத்தில் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்க்கு வாடிக்கையாளர்கள் வாங்கி சென்றனர். விற்பனை ரொம்பவும் சுமார்," என்றார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...