அதிக மருத்துவ கல்லூரிகள் திறப்பதால் தமிழக மாணவர்கள் பயன்பெறுவார்கள்- ஜெயப்பிரகாஷ் காந்தி!

தமிழகத்தில் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் தமிழக மாணவர்கள் அதிகமாகப் பயன் பெறுவார்கள் என கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.


கோவை: தமிழகத்தில் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் தமிழக மாணவர்கள் அதிகமாகப் பயன் பெறுவார்கள் என கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.

கூடுதல் மருத்துவக் கல்லூரிகளால், 'கட் ஆப்' மதிப்பெண் குறையும் என்பதால், தமிழக மாணவர்களுக்குப் பயன் கிடைக்க உள்ளதாகக் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டன. மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு விரைவில் துவங்க உள்ளது.

தமிழகத்தில் கூடுதலாக, 11 மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:-

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை, தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு, 700 - 720 மதிப்பெண்களை, 85 மாணவர்கள் மட்டுமே பெற்றிருந்தனர். ஆனால், இந்தாண்டு 197 பேர் பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் நீட் தேர்வுக்கான, 'கட் ஆப்' குறைந்து வருகிறது.

இதற்குக் காரணம், கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் துவங்கப்படுவதே, கடந்தாண்டு தமிழகத்தில், 2,747 மருத்துவ இடங்கள் இருந்தன. நடப்பாண்டு புதிதாக மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட்டதால் மொத்தம், 4,100 மருத்துவ இடங்கள் இருக்கும்.

இதனால், தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய பயன் கிடைக்கும். மருத்துவ இடங்களுக்கான 'கட் ஆப்' மூன்று முதல் ஐந்து மதிப்பெண் குறையும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...