கோவையில் யானையின் தந்தம் திருடிய 3-பேர் கைது!

கோவை அருகே உயிரிழந்த யானைத் தந்தங்களைத் திருடிப் பதுக்கி வைத்திருந்த 3-பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை அருகே உயிரிழந்த யானைத் தந்தங்களைத் திருடிப் பதுக்கி வைத்திருந்த 3- பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை போளுவாம்பட்டி வனச்சரகம், ஜவ்காடு வனப்பகுதியில் உயிரிழந்த யானையின் எலும்புகள் கண்டறியப்பட்டது.

மாவட்ட வன அலுவலர் தலைமையில் ஐந்து தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணையில், 30-வயதுடைய யானையின் உடலிலிருந்து இரண்டு தந்தங்களும் அகற்றப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அப்பகுதியில், முட்புதருக்குள் மறைத்து வைக்கப்பட்ட தந்தம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக, தாணிகண்டி கிராமத்தைச் சேர்ந்த மருதுபாண்டி(27), ராமன்(50), சின்னான்(50), ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

மூங்கில் குருத்து எடுக்கச்சென்றபோது, இறந்த யானையின் தந்தத்தை எடுத்து மறைத்து வைத்ததாக ஒப்புக்கொண்டனர். மூவரும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு, பவானி சாகர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...