திருப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

திருப்பூர் வாலிபாளையும் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வக்கீல் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.


திருப்பூர்: திருப்பூர் வாலிபாளையும் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வக்கீல் தர்மராஜன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

திருப்பூர் வாலிப்பாளையம் சடையப்பன் கோவில் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் தர்மராஜ், 50 என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்று காலை வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் வெளியூர் கோவிலுக்குச் சென்றுள்ளார்.

இதனிடையே, அவரது வீட்டிலிருந்து கரும்புகை வருவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினருக்கும், தர்மராஜுவுக்கும் தகவல் அளித்தனர்.



இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டது, வீடு பூட்டி இருந்த காரணத்தாலும், தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, மற்றொரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு சுமார் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வீட்டின் கதவை உடைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 30-நிமிட போராட்டங்களுக்குப் பிறகு தீயை முற்றிலுமாக அணைத்தனர். வீடு பூட்டப்பட்டிருந்ததால், தீ விபத்து ஏற்பட்டது தாமதமாகவே அக்கம் பக்கத்தினருக்குத் தெரியவந்தது.

இதன் காரணமாகத் தீயை முற்றிலும் அணைப்பதற்கு வீட்டிலிருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து சேதம் ஆகியது. வீட்டிலிருந்து கோயிலுக்குச் செல்லும் முன் வீட்டில் விளக்கு பற்ற வைத்துள்ளனர்.

அதன் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும், அல்லது மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்க வேண்டும் எனவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆகியுள்ளது. இந்த தீ விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...