கோவையில் மதுபானம் அருந்திய மூன்று பேர் அடுத்தடுத்து பலி!

கோவையில் மதுபானம் அருந்திய மூன்று பேர் அடுத்தடுத்து பலியான சம்பவம் தொடர்பாக, பந்தய சாலை காவல் துறையினர் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவையில் மதுபானம் அருந்திய மூன்று பேர் அடுத்தடுத்து பலியான சம்பவம் தொடர்பாக, பந்தய சாலை காவல் துறையினர் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் அருந்ததியர் வீதியைச்சேர்ந்தவர்கள் பார்த்தீபன்(31), சக்திவேல்(60) முருகானந்தம்(55). பார்த்தீபன் மற்றும் சக்திவேல் இருவரும் பெயிண்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

தென்காசியை சேர்ந்த முருகானந்தம் இப்பகுதியில் தங்கி சமையலராக பணிபுரிந்து வந்துள்ளார். நண்பர்களான மூவரும் நேற்று தீபாவளி கொண்டாடுவதற்காக மது அருந்தியுள்ளனர்.

இந்நிலையில் 6.30-மணி அளவில் மூவரும் மீண்டும் ஒரு முழு பாட்டில் மது பாட்டிலை பிளாக்கில் வாங்கியுள்ளனர். இதனையடுத்து, அருந்ததியர் வீதியிலுள்ள, பட்டத்தரசியம்மன் கோவில் எதிரே இருக்கும், பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து 3- பேரும் மது அருந்தியுள்ளனர்.

பின்னர் சக்திவேல் தனது வீட்டுக்குச் செல்ல கோவிலின் பின்புறம் வந்தவர், கீழே உட்கார்ந்தவர் இறந்துவிட்டார். இவரை தொடர்ந்து பாரதியார் சாலையில் சென்ற முருகானந்தம் இறந்துள்ளார்.

இருவரது உடல்களும் எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், பார்த்தீபன் தனது வீட்டருகே இறந்துள்ளார். பின்னர் அவரது உடலும் பிரேதப்பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியல் துறையினர் மது அருந்த பயன்படுத்திய டம்ளர், கைரேகை, மது அருந்திய பாட்டில் மற்றும் அப்பகுதியில் உள்ள தடயங்களை எடுத்துச் சென்றனர்.



பந்தய சாலை காவல்துறையினர் மது அருந்திய மூன்று பேர் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...