கோவையில் பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை!

கீரநத்தத்தில் தனது பெற்றோர் திட்டியதால் 4-வது மாடியிலிருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த என்ஜினீயரிங் மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை அருகே தனது பெற்றோர்கள் திட்டியதால் 4-வது மாடியிலிருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கீர நத்தத்தில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்தவர் மோகன் குமார். இவரது மகன் சரண் வயது 18, இவர் மதுக்கரையில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சரவணனின் வீட்டிற்கு அவரது சகோதரி தனது 4 வயது பெண் குழந்தை உடன் வந்திருந்தார். குழந்தையை அழைத்துக்கொண்டு சரண் கடைக்குச் சென்று திரும்பினார்.

இதை அவரது பாட்டி கண்டித்தார். இதைத் தொடர்ந்து பாட்டி அவருடைய பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர்களும் அவரை கண்டித்தனர்.

இதனால் மனவேதனை அடைந்து கோபமடைந்த சரண் மாடியில் அமர்ந்திருந்தார். பிறகு நாலாவது மாடிக்கு சென்று மேலே இருந்து கீழே திடீரென குதித்தார். உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...