கோவையில் தோழியின் கணவருடன் கள்ளக்காதல்-இளம்பெண் கொலை!

கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தோழியின் கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்ட்ட விவகாரம் தொடர்பாக தோழியின் கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை சாய்பாபா காலனி சபாபதி வீதியைச் சேர்ந்தவர் அஸ்வதி (20). பி.கம். பட்டதாரி. திருமணம் ஆகவில்லை. இவரது தந்தை இறந்து விட்டார். தற்போது தாயாருடன் வசித்து வந்தார்.

அஸ்வதி தடாகம் ரோட்டில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு பணியாற்றிய திருமணம் ஆன பெண்ணுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கும் அவர் சென்று வந்தார்.

அப்போது அந்த பெண்ணின் கணவருடன் அஸ்வதிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அவர்கள் கள்ளக்காதலர்களாகினர்.

இந்த விவகாரம் அந்த பெண்ணுக்கு தெரிந்து கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த பெண் கணவரை பிரிந்து சென்றார்.

அதன்பிறகு அஸ்வதிக்கும், பெண்ணின் கணவருக்குமான நெருக்கம் அதிகரித்தது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

இந்தநிலையில் அஸ்வதி தனது வீட்டில் பிணமாக கிடந்தார். கழுத்தில் துணியால் இறுக்கப்பட்ட தடயங்கள் இருந்தன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுபற்றி அஸ்வதியின் உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அஸ்வதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அஸ்வதியுடன் தொடர்பிலிருந்த நபர் யார்? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். செல்போன் மூலம் அவரை போலீசார் தொடர்பு கொள்ள முயன்றனர்.

ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. செல்போன் டவரை சோதனை செய்தபோது அந்த நபர் ஊட்டியில் இருப்பது தெரியவந்தது.

இதனால் அஸ்வதியுடன் ஏற்பட்ட மோதலில் அவரை கழுத்தை இறுக்கி கொன்று விட்டு அவர் தப்பிச் சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரை பிடித்தால் தான் அஸ்வதி எப்படி இறந்தார்? எதற்காக கொல்லப்பட்டார்? என்ற விவரம் தெரியவரும்.

எனவே அந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்களைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...