கோவை அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு வார்டு 24-மணி நேரமும் செயல்படும் -டீன் நிர்மலா தகவல்!

தீக்காய சிறப்பு வார்டு 24-மணி நேரமும் செயல்படும். எதிர்பாராதவிதமாகத் தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரவேண்டும். விரைந்து சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என டீன் தகவல்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு வார்டு தீபாவளி பண்டிகையையொட்டி 24-மணி நேரமும் செயல்படும் என டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் கவனக் குறைவின் காரணமாக வெடி விபத்துக்கள் ஏற்படுகிறது.

இது போன்ற வெடி விபத்துக்களில் தீக்காயம் ஏற்படும் நபர்களுக்குச் சிகிச்சை அளிக்க கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தீக்காயம் ஏற்பட்டு வரும் நபர்களுக்கு முதலுதவி அளிக்க மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவிலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:-

தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீ காயத்திற்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் தீக்காயத்திற்குச் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 20-படுக்கை வசதிகள் இருக்கும். தீக்காயத்துடன் வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் தனி டாக்டர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இன்று முதல் பணியில் இருப்பார்கள் இந்த வார்டு 24-மணி நேரமும் செயல்படும். எதிர்பாராதவிதமாகத் தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரவேண்டும். காய மேற்பட்டவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...