மாநகராட்சி ஆணையாளர் தலைமையில்‌ சிறப்பு மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ நடைபெற்ற சிறப்பு மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ 14-பேர்‌ கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ திரு.ராஜ கோபால்‌ சுன்௧கரா இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ இன்று 03.11.2021 நடைபெற்ற சிறப்பு மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ 14 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்களிடம்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளைச்‌ சேர்ந்த பொதுமக்கள்‌ கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌.



இதில்‌ சொத்துவரி விதிப்பு, காலியிட வரிவிதிப்பு, சொத்துவரி பெயர்‌ மாற்றம்‌, தொழில்‌ வரி விதித்தல்‌, தொழில்‌ உரிமம்‌ வழங்குதல்‌, பாதாளச் சாக்கடை இணைப்பு வழங்குதல்‌ மற்றும்‌ சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர்‌ வசதி, சுகாதாரம்‌ போன்ற அடிப்படை வசதிகள்‌ குறித்தும்‌ பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்களை அளித்தனர்‌.

இன்றைய குறைதீர் கூட்டத்தில்‌ மாநகராட்சி பொறியியல்‌ பிரிவிற்கு 3 மனுக்களும்‌, வருவாய்‌ பிரிவிற்கு 4 மனுக்களும்‌, நகரமைப்பு பிரிவிற்கு 3 மனுக்களும்‌, சுகாதாரப்‌ பிரிவிற்கு 2 மனுக்களும்‌, பொதுப் பிரிவிற்கு 2 மனுக்களும்‌ என மொத்தம்‌ 14 மனுக்கள்‌ பெறப்பட்டது.

இக்கோரிக்கை மனுக்களைப்‌ பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ இம்மனுக்களின்‌ மீது துறை ரீதியாகத் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையர்‌ மற்றும்‌ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

மேலும்‌, ஒவ்வொரு வாரமும்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மண்டல அலுவலகங்களில்‌ புதன்கிழமையன்று‌, மத்திய மண்டலத்தில்‌ வெள்ளிக்கிழமையன்று‌ சிறப்பு மக்கள்‌ குறைதீர்க்கும்‌ கூட்டம்‌ நடைபெறும்‌ எனவும்‌, பொதுமக்கள்‌ இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்கள்‌ கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்‌ எனவும்‌ குடிநீர் வசதி, சுகாதார வசதி, மின்விளக்கு வசதி மற்றும்‌ பொதுமக்களின்‌ கோரிக்கைகள்‌ மீது துறை ரீதியாகத் தகுந்த நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும்‌ எனவும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில்‌ கிழக்கு மண்டல உதவி ஆணையர்‌ செந்தில்குமார் ரத்தினம்‌, மாநகராட்சி அனைத்து அலுவலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...